2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சப்ரிகமக் வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கொவிட் 19 தாக்கம் காரணமாக, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் இடைநிறுத்தப்பட்டிருந்த சப்ரிகமக் வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் எண்ணக்கருவில் உருவான பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கு 64 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள 32 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 02 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூறினார்.

இந்நிதி மூலம், வடிகான் அமைத்தல், வீதி நிர்மாணம், பாடசாலை அபிவிருத்தி உட்பட 48 அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி செய்யப்படாமல் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த பின்தங்கிய கிராமங்கள், இத்திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X