2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சமகால அரசியல் குறித்து விழிப்புணர்வு இல்லை’

Editorial   / 2017 நவம்பர் 30 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

“சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் உண்மையில் சாய்ந்தமருது பொதுமக்களும், அங்குள்ள பள்ளிவாசல் சம்மேளனத்துக்கும் சமகால அரசியல் குறித்து விழிப்புணர்வும், தெளிவில்லாமையுமே காரணம்” என, கிழக்கு சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் என்.ரீ.நியாஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கான சமூக விழிப்புணர்வு கூட்டம், அக்கரைப்பற்று தலைமைக் காரியாலயத்தில் நேற்று (29) நடைபெற்றபோதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பொதுவாக சமூகத்தில் நிகழ்கின்ற பிரச்சினைகள் குறித்து பேசிவிட்டு, குறிப்பாக சமகாலத்தில் உள்ள அரசியல் குறித்து பேசுகையில், நியாயமற்ற முறையில் அநியாயமான முடிவுகளும் எடுக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான  ரிஷாட் பதியுத்தின் சாய்ந்தமருது பிரதேச சபை விவகாரம் குறித்து பலதடவைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

“இறுதியில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சாய்ந்தமருதுக்கு அழைத்து வந்து, கள நிலவரத்தை நன்கு தெளிவுபடுத்தினார்.

“மேலும், பிரதேச சபைக்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்னெடுத்து, வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் நேரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அம்பாறை மாவட்டத்தில் ஆதரவு கூடிவிடும் என்பதற்காக  சதித்திட்டம் மேற்கொண்டன.

“இதனால்தான், கல்முனை மாநகர சபை, சாய்ந்தமருது பிரதேசசபை எல்லைப் பிரிப்பு  பிரச்சினையை முன்வைத்து, சமூகத்தில் பெரும் குழப்பதை ஏற்படுத்தி, ஊர்வாதம் உண்டாகி, பிரதேச சபை வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் பிற்போட்டதாகும்.

“இது குறித்து அண்மையில் அமைச்சர் பைசர் தெரிவித்துத் தெரிவிக்கையில், “இரண்டு கட்சித் தலைவர்களும் அமைச்சர்கள் என்ற ரீதியில் கௌரவம் கொடுத்து இரு தலைவர்களும்  ஒத்துழைத்தால் சாய்ந்தமருது பிரதேச சபையை வழங்குவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்றார்.

“எனினும், பிரதேச சபைக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட முடியும் என்று, ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தை, சாய்ந்தமருது பொதுமக்களும் பள்ளிவாசல் சம்மேளனமும் பிழையாக விளங்கியுள்ளது.

“இவ்வாறான சமூக விழிப்புணர்வு இன்மையால் எடுக்கப்படுகின்ற முடிவுகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

“எனவே, எதிர்காலத்தில் எமது பிரதேசங்களில் இவ்வாறான பிழையான முடிவுகளை அரசியல் சுய இலாபங்களுக்காக சமூக விரோதிகள் எம்மீது செயற்படுத்த எத்தனிக்கலாம்.

“ஆகவே இவ்வாறான விடயங்களில் நாங்கள் தெளிவாகவும், விழிப்புணர்வோடும் இருக்கவேண்டும்” என்றார்.

இக்கூட்டத்தில் பட்டியடிப்பிட்டி, பள்ளிக்குடியிருப்பு, இசங்கணிச்சீமை, ஆலிம்நகர், பறக்கத்நகர், ஹிளுறு நகர். அல்ஹுதா கிராமம் போன்ற கிராமங்களில் உள்ள புத்திஜீவிகள், பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சமூக சேவை கழங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள முக்கியஸ்தர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .