2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘சமூர்த்தியால் வறுமையை ஒழிக்க முடியாது’

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு   

சமூர்த்தி முத்திரைகளை வழங்குவதால் மட்டும் நாட்டில் இருந்து வறுமையை ஒழித்துவிட முடியாது என்றும் வறுமையை ஒழிப்பதற்கான உபாயங்களைத் தேடுவதற்கு, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்தார்.   

அம்பாறை- திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 1,643 குடும்பங்களுக்கு, சமூர்த்தி உரித்துப் படிவம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்  

சமூர்த்தி முத்திரைகள் கிடைக்கப் பெறாத தகுதியான மக்கள் இருப்பார்களேயானால், அவர்கள் உரிய அதிகாரிகளைச் சந்தித்து விண்ணப்பங்களைப் பெற்றுத் தங்களுக்கான முத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.  

சமூர்த்தியின் ஊடாக திருக்கோவில் பிரதேசத்தில் முற்றுப்பெறாத நூறு வீடுகளின் கட்டட நிர்மாணப் பணிகளைப் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் மலசலகூடங்கள் இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும், மலசலகூடங்களை வழங்குவதற்கானத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாகவும், இதேவேளை உயர்கல்வி மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தையும் பாரிய அளவில் முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வறுமையற்ற நாடாக இலங்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, தமது அரசு முன்னெடுக்கும் நிலையில், மக்களும் அரசுடன் இணைந்து தங்களது குடும்பங்களின் வறுமையை ஓழிப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X