2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சஹ்ரானின் சகாக்களது சடலங்கள் தோண்டப்படும்

Editorial   / 2019 ஜூன் 06 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், வசந்த சந்திரபால

சாய்ந்தமருதில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களது சடலங்கள், மரபணு பரிசோதனைகளுக்காக, நாளைய தினம் (07) தோண்டி எடுக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படுகிற்து.

அம்பாறை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கமையவே, இந்தச் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியன்று, கல்முனை - சாய்ந்தமருது சுனாமி கிராமத்திலுள்ள வீடொன்றில், பாதுகாப்புத் தரப்பினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

இதன்போது, பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து அந்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும் 6 ஆண்களினதும் 3 பெண்களினதும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டவர்களில் உள்ளடங்குவதாகக் கூறப்பட்டது.

குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் சடலங்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X