2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சிறுபான்மை மக்கள்; நிதானத்துடன் செயற்பட வேண்டும்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 நவம்பர் 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது தோன்றியுள்ள அரசியல் நெருக்கடியின் மத்தியில், சிறுபான்மை மக்கள் மிகவும் நிதானத்துடனும் புத்திசாதுரியமாகவும் செயற்பட வேண்டும் என சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான ஏ.எம்.எம்.நௌஷாட் தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில், நேற்று முன்தினம் (05) மாலை நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச மக்கள் பிரதிநிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே, சகல பிரதிநிதிகளினதும் ஏகோபித்த கருத்தாக இந்த பிரகடனத்தை அவர் வெளியிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற அரசியல் கட்சிகள்  சிறுபான்மை மக்களின் எந்தவொரு பிரச்சினையையும் முழுமையாக பொறுப்பேற்று தீர்த்து வைத்த வரலாறுகள் இல்லை அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகள், தேவைகளை கருத்தில் கொண்டு சில சலுகைகளை மாத்திரம் செய்து வந்துள்ளனர்

“சிறுபான்மை கட்சிப் பிரதிநிகள் தாம் நினைத்தவாறு சென்று எமது சமுகத்தின் இருப்பை கொச்சைப்படுத்தி, காட்டிக் கொடுக்கின்ற வேலைகளில் ஈடுபடாமல் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் இந்த முயற்சிகளுக்காக தாம் சார்ந்த கட்சிகளின் தலைமைகள் எடுக்கின்ற கூட்டான சரியான முடிவிகளின் பிரகாரம் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

சமுகத்துக்கு சாதகமான செயற்பாடுகளில் கைகோர்த்து செயற்படுமாறு, வாக்களித்த மக்கள் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் இதனை தெளிவு படுத்துகின்றோம் எனவும் தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X