2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறுவர் பூங்காவை புனரமைக்குமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டு, பராமரிப்பின்றி தூர்ந்து போயுள்ள சிறுவர் பூங்காவைப் புனரமைக்குமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையால் கடந்த 06 வருடங்களுக்கு முன்னர் சுமார் 40 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறுவர் பூங்கா, எவ்வித பராமரிப்புமின்றி, பற்றைக்காடுகள் வளர்ந்து காணப்படுவதோடு, விச ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள வேலி, விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் துருப்பிடித்த நிலையில் உள்ளன.

பொழுது போக்குக்காக வரும் மக்கள் குப்பை போடும் இடமாகவும் இதனை பயன்படுத்துகின்றனர். இதனால் டெங்கு பெருகும் அபாயமான இடமாக இச்சிறுவர் பூங்கா காணப்படுகின்றது.

பொழுது போக்குக்காக கடற்கரைக்கு வரும் மக்கள் உட்காருவதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடாரங்களும் சேதமுற்றுள்ளது.

ஒலுவில் துறைமுகத்தை அண்டிய இக் கடற்கரை பிரதேசத்துக் நாளாந்தம்  சுற்றுலா வரும் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் வருகின்றார்கள்.

எனவே, இச்சிறுவர் பூங்காவைப் புனரமைத்து பயன்பாட்டுக்கு உதவுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X