2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிவில் பாதுகாப்பு குழு மூலமாகவே தீர்வு காணவேண்டும்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.ஜபீர்

பொலிஸ் உத்தியோகத்தர்கள் சீருடையுடன் வந்து உங்களுடன் பேசி தீர்வு காண்பதனை விடவும் சிவில் பாதுகாப்பு குழு மூலமாக உங்களுடைய பிரச்சினைகளுக்கு நீங்களே தீர்வு காண்பது மிகவும் சிறப்பான செயற்பாடாக அமையுமென  நான் நினைக்கின்றேன்என்று தெரிவித்த  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.ஜி.டீ.ஏ.கருணாரட்ன  , ஒரு விடயத்தை ஒரே நோக்காக கொண்டு செல்லும் போது அதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவ்வாறான பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து கொள்வதற்காக இவ்வாறான படித்த சிறந்த குழுவினை உருவாக்கியுள்ளோமெனத்தெரிவித்தார் .
சவளக்கடை பிரதேச சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  றம்சீன் பக்கீர் தலைமையில் பொலிஸ் நிலைய மண்டபத்தில் நேற்றுமுன்தினம்  நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வீ.ஜி.டீ.ஏ.கருணாரட்ன   இவ்வாறு தெரிவித்தார்.
   அதில் கலந்து கொண்டு அவர் உரையாற்றுகையில்:
  பல்வேறுபட்ட இனங்கள் ஒன்றாக வாழும் போது அங்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமான விடயம். சாதாரணமாக அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதனை ஊடகத்திற்கு கொண்டு அதனை பெரிதாக்கி விடுவார்கள். அதுபோன்று வாய் பேச்சுகள், சமூகம் மத்தியில் பிழையான கருத்துக்களை உருவாக்கி செல்லுகின்றன. இதனை பார்த்தல் இந்த இரண்டு நபர்களும் சேர்ந்து கதைத்த கதை விரிவடைந்து அதனால், வீதிக்கு இறங்கி போராட்டம் நடாத்தும் நிலைக்குதான் எங்கள் மத்தியில் நிலைமை உருவாகியுள்ளது. அதற்காகதான் இவ்வாறான சிவில் பாதுகாப்பு குழுக்கள் அமைத்து குழுக்கள் ஊடாக பொதுமக்களிடத்தில் இந்த விடயம் விரிவடைந்து சென்று பல்வேறு கருத்து முரண்பாடுகளை உருவாக்கி விடக்கூடாது என்பதுதான் சிவில் பாதுகாப்பு குழுவின் நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .