2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சோளம் அறுவடை விழாவும் நோய் தொற்று விழிப்புணர்வும்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஜனவரி 14 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச விவசாய விரிவாக்கற் பிரிவுக்கான சோளம் அறுவடை விழாவும், புதிய வகை நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வும், சம்புநகரில் இன்று (14) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச விவசாய விரிவாக்கற் பிரிவின் ஏற்பாட்டில், நிலைய பொறுப்பதிகாரியும் விவசாய போதனாசிரியருமான ஏ.எச்.ஏ.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மேட்டு நிலப் பயிர்ச் செய்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கைக்கு அடுத்த படியாக சோளம் பயிர்ச் செய்கையே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இம்மாவட்டத்தில் சுமார் 4,000 ஏக்கருக்கும் அதிகளவில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை, அட்டாளைச்சேனை பிதேசத்தில் 250 ஏக்கரில் இப்பயிர்ச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு ஏக்கரில் இதனைப் பயிரிடுவதன் மூலம் ஒரு இலட்சம் ரூபாய் வரையில் இலாபமீட்ட முடியுமென, விவசாயத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும், சோளப் பயிரில் புதிய வகை நோய் தொற்றின் காரணமாக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, ஒவ்வொரு பிரதேசங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X