2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெங்கு சோதனை நடவடிக்கைகள் தீவிரம்

Editorial   / 2018 ஜூன் 16 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 8 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் வியாழக்கிழமை (14) இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில், 6 வீடுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதுடன், நுளம்பு உற்பத்தியாகும் வகையில் இருப்பிடங்களை வைத்திருந்த 4பேருக்கு எதிராக எச்சரிக்கைக் கடிதமும் வழங்கப்பட்டது.

குறிப்பாக வாழை மரத்தை வெட்டியதன் பிற்பாடு வாழை அடியில் ஏற்படும் பள்ளத்தினுள் தேங்கி நிற்கும் நீரினுள்ளும் அதேபோன்று, வாழை மொத்தியில் இருந்து கீழே விழும் இதழ்களுக்குள்ளும் டெங்கு நுளம்புகள் உருவாகும் சாத்தியத்தை பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதார அதிகாரிகள், மக்களுக்கு சுட்டிக்காட்டினர்.

மேலும், டெங்கு உருவாகும் வகையில் இடங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

அத்தோடு, பாடசாலை வளாகம் ஒன்றையும் அதிகமான கிணறுகளையும் பார்வையிட்டனர்.

பரிசோதனை நடவடிக்கையில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்களான இ.மோகனதாசன், எஸ்.கோகுலன், பி.கேதீஸ்வரன் மற்றும் சுகாதார பூச்சியலாளர் எம்.ஏ.நகீம், பொதுச்சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.சிறிதரன், ஆலையடிவேம்பு பிரதேச செயலக டெங்கு கட்டுப்பாட்டு இணைப்பாளர் கா.கிருசாந்தன் கிராம உத்தியோகத்தர் ஆர். சிறிதாசன்,  அபிவிருத்தி உத்தியோகத்தர் தட்சாயினி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .