2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தனித்துநின்று பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 19 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்;.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

சர்வதேசத்தின்; தேவைகளும் தலையீடுகளும் அதிகரித்துக் காணப்படும் இவ்வேளையில்,  பல்லினச் சமூகங்கள் வாழ்ந்துவரும் இலங்கை போன்ற நாடுகளில் எந்தவொரு சமூகமும் தனித்துநின்று தனது சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க முடியாது எனத் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

அனைத்துச் சமூகங்களும் ஒன்றிணைந்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் தீர்வு யோசனைகளை முன்வைக்கும்போது மட்டுமே அவை பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைவதுடன், நாட்டில் நிலையான சமாதானத்தையும் ஏற்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

தேசிய காங்கிரஸின் 13ஆவது வருடாந்தப் பேராளர் மாநாடு, அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சர்வதேச நாடுகள் தங்களின் தேவைகளுக்காக ஒரு நாட்டிலுள்ள மக்களினது கலை, கலாசாரம், மதம், அரசியல் ஆகியவற்றில் குழப்பங்களை ஏற்படுத்தி, அமைதியுடனும் இன ஒற்றுமையுடனும் இருந்;த நாடுகளில் ஆட்சி மாற்றம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை உருவாக்கி வருவதையிட்டு மக்கள் நிதானமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்' என்றார்.

'ஜனாதிபதி மற்றும் சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நல்லாட்சியை அமைத்த போதிலும், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது.
'நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இனவாதச் செயற்பாடுகள் தடுக்கப்படாமல் அதிகரித்தவண்ணம் உள்ளன.

'இந்நிலையில், புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவிசெய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு ஒரு காலவரையறையை வழங்கி எதிர்க்கட்சியில் அமர வேண்டும்' என்றார்.

'குறிப்பாக, முஸ்லிம் சமூகம் தமது கலை, கலாசாரம், மதம், அரசியல் போன்ற விடயங்களில் கவனமாக ஆராய்ந்து ஒழுக வேண்டும். எமது ஆடை விடயம் பற்றி இஸ்லாம் என்ன கூறியுள்ளதோ, அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், அராபியர்களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் எமக்குக் கிடையாது.

மேலும், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை உரிய காலத்தில்; நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசாங்கம் மக்களை தொடர்ந்து ஏமாற்றாது, உடனடியாக அத்தேர்தலை  நடத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என்றார்.
 

கட்சியின் தலைவராகவும், செயலாளராகவும்  முன்னாள் அமைச்சா் .எல்.எம்.அதாஉல்லாவும், மேலதிக செயலாளாராக டாக்டா் ஏ.உதுமாலெப்பை, பொருளாளா் ஜே.வொஸீா், தேசிய அமைப்பாளராக எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.பஹ்ஜி ஆகியோா் உள்ளிட்ட 19 போ் தொிவு செய்யப்பட்டனா்.

 
இதனையடுத்து மாநாட்டு 17 தீர்மானங்கள்  தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.பஹ்ஜியினால் வாசிக்க்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
 01.கடந்த 12 ஆவது பேராளர் மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்களை மீள இப்பேராளர் மாநாடு வலியுறுத்துகின்றது.
 
02. முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம் மக்களின் உயிர்கள், உடமைகள், பொருளாதாரம் என்பவற்றை வாக்குறுதியளித்தபடி பாதுகாக்க வேண்டும்.
 
03முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
 
04. அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கென விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். அந்த மக்களுக்கு நஷ்டயீடும் வழங்கப்பட வேண்டும்.
 
05. உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்களை உரிய காலத்தில் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 
06. கிழக்கில் அமைக்கப்பட்டது போல் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை கலந்தாலோசித்து தீர்ப்பதற்கான மக்கள் அவையங்கள் மாகாணங்கள் தோறும் அரசியல்வாதிகள், உலமாக்கள், சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள், புத்தி ஜீவிகளைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்.
 
07.கிழக்கு மாகாண அவையத்தை இம்மாநாடு வாழ்த்தி, வரவேற்கின்றது.
 
08.அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
 
09. குடிமக்களின் காணியுரிமை மாவட்ட அடிப்படையிலான இனப்பரம்பல் விகிதாசாரத்திற்கு ஏற்பதான ஆகக் குறைந்த காணிப்பகிர்வு என்பன அரசியல் அமைப்பு சட்ட மூலம் உறுதி செய்ய வேண்டும்.
 
10. 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அடிப்படையாகக் கொள்ளாது அதிகாரப் பரவலாக்கம், அதிகார அலகுகள் என்பன சுதேச அனுவங்களின் அடிப்படையில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இறைமையை எல்லாச் சூழ்நிலையிலும் பேணும் வகையில் அமைய வேண்டும்.
 
11.இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிச் சக்திகளின் தலையீடுகள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் என்பதுடன் இலங்கையின் அணிசேரா வெளிநாட்டு கொள்கை மீள வலியுறுத்தப்பட வேண்டும். 
 
12. இலங்கை, இஸ்ரேல் வெளியுறவு நிறுத்தப்பட வேண்டும்.
 
13.தேசிய வளங்களின் சுதேச பயன்பாடு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவை வெளிநாடுகளுக்கொ, பல்தேசிய கம்பனிகளுக்கோ கையளிக்கப்படக் கூடாது.
 
14.இலங்கை மக்களின் வாழ்வுரிமை, தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பம் என்பவற்றை கேள்விக்குட்படுத்தும் வகையிலான சர்வதேச ஒப்பந்தங்கள் எதனையும் அரசு மேற்கொள்ளக்க கூடாது.
 
15 இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்டு வரும் உட்புகுத்தப்பட்ட பயங்கரவாதம், புணையப்பட்ட அடிப்படைவாதம், இனவாதம் என்பன உடனடியாக அரசினால் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும்.
 
16.நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பன பாரபட்சமின்றி அமுல் படுத்தப்பட வேண்டும்.
 
17.நாட்டின் பொருளாதார செயற்பாட்டின் மையங்களான சிறிய, பெரிய வர்தக நிலையங்கள், உற்பத்திசாலைகள் என்பனவற்றில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் பிஎன்ற 17 தீர்மானங்களையும் இப்பாளர் பேராளர் மாடு வலியுறுத்தி பிரகடனப்படுத்துகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .