2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தமிழா்களை ‘ஏழனமாகப் பார்த்தவா்கள் இன்று கெஞ்சுகிறார்கள்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழர்களை அடக்கி, ஒடுக்கி விட்டோம் என எம்மைப் ஏழனமாகப் பார்த்தவர்கள் இன்று அரசியல் அதிகாரப் போட்டியின் நிமிர்த்தம், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

சமகால அரசியல்நிலை தொடர்பில், திருக்கோவிலுள்ள அவரது அரசியல் பணிமனையில் வைத்து இன்று (05) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அதிகாரப் போட்டியால், கடந்த ஒருமாத காலமாக நிர்வாகம் சீர் குலைந்து காணப்பட்டுள்ளதுடன், நாட்டின் அபிவிருத்தி, பொருளாதாரம், மக்கள் நலன்கள் என அனைத்தும் வீழ்ச்சியடைந்துள்ளனவெனத் தெரிவித்தார்.

இவை எல்லாவற்றையும் விட சிறுபான்மை மக்களுக்கான தீர்வு திட்டம், அரசியல் கைதிகளின் விடுதலை விடயம் என அனைத்தும் ஒரு பொட்டியில் வைத்துப் பூட்டி வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே காணப்படுவதாகவும் தெரிவித்த அவர், இவ்வாறான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு, நீதிமன்றம் ஏறி இறங்குவதில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லையென்றும் தெரிவித்தார்.

பேரினவாதிகளின் அரசியல் இருப்புக்கான இந்த அதிகாரப் போட்டியில், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கும் எம்மவர்கள், அவர்களுடைய கதிரைகளைப் பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளனரே தவிர, தமிழர்களின் இழப்புகள் தொடர்பிலோ அல்லது நலன்களிலோ தீர்க்கமான எந்தவித அழுத்தங்களையும் கொடுக்கவில்லையென்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .