2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தரம் 10ஐ ஆரம்பிக்க அனுமதி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாலமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் 2018.01.01 தொடக்கம் தரம் 10 ஐ ஆரம்பிக்க, கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக, பாடசாலை அதிபர் எம்.எச். அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

தரம் 10 இல் கல்வி கற்பதற்காக, சின்னப்பாலமுனை, ஜலால்புரம், உதுமாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், சுமார் 2 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயம் அல்லது தூரப் பிரதேசங்களிலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.

பொருளாதாரக் கஷ்டத்திலுள்ள பெற்றோர் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு, பிள்ளைகள் கல்வியைத் தொடராமல் கைவிடக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.

அல் ஹிக்மா பாடசாலை ஒரு கிராமப் புறத்தில் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக தரம் 9 வரையான வகுப்புகளே காணப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக பெற்றோர்களால் இப்பாடசாலையில் தரம் 10 ஐ ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கைக்கமைய, இப்பாடசாலையில் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு தொடக்கம் 10 வகுப்பையும், 2019ஆம் ஆண்டு தரம் 11 ஐயும் ஆரம்பிப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. அப்துல் நிஸாம் சிபாரிசு வழங்கியுள்ளதாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .