2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தாமதமாகும் தேர்தல்கள்: ‘ஜனநாயகத்துக்கு தடங்கல்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஜூலை 31 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“தேர்தல்களைப் பிற்போடுவது, ஜனநாயக வழி முறைகளில் தடங்கல்களை ஏற்படுத்துவதாக அமைவதோடு, மக்களின் தெரிவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு முயற்சியுமாகும்” என, கிழக்கு மாகாண சபை உறுப்பினா் ஏ.எல். தவம் தெரிவித்தார்.

 

இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,

“தற்போதுள்ள விகிதாசார முறையை இல்லாமல் செய்து, கலப்புப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காகவும், ஒரே நேரத்தில் அனைத்து மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவதற்காகவும், மாகாண சபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை,  கசப்பான விடயமாகும்.

“காலம் முடிந்தால், யார் வெல்வார், யார் தோற்பார் என்பதை விட, மக்கள் அடுத்து வரும் ஐந்து வருடங்களுக்கான தமது பிரதிநிதி யார் என்பதைத் தீர்மானிக்கின்ற தெரிவைச் செய்வதற்கு, இடமளிக்கப்பட வேண்டும். அதில், அதிகாரத்தில் உள்ளவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

“உள்ளூராட்சித் தேர்தல் முறையும் நாடாளுமன்றத் தேர்தல் முறையும் ஒன்றாக இருப்பதால், மாகாண சபைத் தேர்தல் முறையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று, ஒன்றும் கட்டாயம் கிடையாது. உலகளவில் பல நாடுகளில், ஒவ்வோர் அதிகார மட்டத் தேர்தல் முறைகளும், தேவைக்கேற்ப வித்தியாசமாக இருக்கின்றன. அதனால், இலங்கையிலும் மாகாண சபைத் தேர்தல் முறைமை, இப்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே தொடர்வதில் ஒரு தீங்கும் வராது.

“எனவே, மாகாண சபைத் தேர்தல் முறைமை மாற்றப்படுவதையும் தேர்தல்கள் பிற்போடப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .