2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

திண்மக்கழிவகற்றல் சேவை முடக்கம்

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்திருப்பதால், அங்கு மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கை வன வள திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

இதனால், கல்முனை மாநகர சபையால் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை அங்கு கொண்டு சென்று கொட்டும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்துக்கு  திண்மக்கழிவுகள் சேகரிப்பு பணிகள் இடைநிறுத்தப்படுவதாகவும் கல்முனை மாநகர சபை, இன்று (29) அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில், தமது வீடுகளில் சேர்கின்ற குப்பைகளை பொதுமக்கள் தமது சொந்த இடங்களிலேயே வைத்து, முகாமைத்துவம் செய்து கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனை மீறி, பொது இடங்களும் வீதிகளிலும் குப்பைகளை வீசினால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாநகர சபை தெரிவித்துள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதெற்கென ஓர் இடம் இல்லாமையால் பல வருடங்களாக பள்ளக்காடு பகுதியிலேயே கல்முனை மாநகர பிரதேசங்களின் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

எனினும், தற்போது அந்நடவடிக்கை தடைப்பட்டுள்ளதை பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறும், மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .