2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீக்குழிக்கப் போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில்  நீர் தேங்கிக் காணப்படுகின்றன.

 இதனால் 15,000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற் காணிகளில் அறுவடைசெய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டும் இல்லையெனில் தாம் தீக்குழிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்து,  கல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் இன்று (30) ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களப்பு முகத்துவாரத்தை வெட்டி, நீரோடுவதற்கு வழி அமைத்து தரவேண்டுமெனக் கோஷம் எழுப்பியவாறு, கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக அரசாங்க அதிபர் உறுதி வழங்கியதை அடுத்து, பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .