2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொண்டர் ஆசிரியர்களுக்கு நேர்முகப் பரீட்சை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களை, இலங்கை ஆசிரியர் சேவை 3ஆம் வகுப்பின் IIதரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நேர்முகப் பரீட்சை, ஏப்ரல் 25ஆம், 26ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா அறிவித்துள்ளார்.

திருகோணமலை கிழக்கு மாகாணப் பேரவைச் செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நேர்முகத் தேர்வுக்கு, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் மூலப்பிரதி, சான்றுப்படுத்தப்பட்ட நிழல் பிரதிகளுடன் வருகை தருமாறும், அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட க.பொ.த (சாதாரண தர, உயர் தர) பரீட்சை சான்றிதழ்கள் கட்டாயம் கொண்டுவருதல் வேண்டும் என்பதுடன், வதிவிடத்தை உறுதிப்படுத்துவதற்கான கிராம உத்தியோகத்தரின் சான்றிதழும் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

முதலாவது தொண்டர் ஆசிரியர் நியமனத் திகதியை உறுதிப்படுத்துவதற்கான பாடசாலை அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி, அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட நேர சுசி, 2007.12.01ஆம் திகதி வரை பாடசாலையில் சேவையாற்றியுள்ளார் என்பது பற்றி அதிபரால் வழங்கப்பட்ட சேவைச் சான்றிதழ், செயலமர்வுகளில் கலந்துகொண்டமைக்கான சான்றிதழ்கள் என்பவற்றையும் இதன்போது சமர்ப்பிக்க வேண்டுமெனவும், செயலாளர் மேலும் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X