2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிமூலமான தொழிற்பயிற்சி நிலையங்களில், கற்கை நெறிகளை மேற்கொள்வதற்கு 2018ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.விநோதராஜா, தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில், தமிழ்மொழி மூலத்தில் இயங்கும் 9 தொழிற் பயிற்சி நிலையங்களால் நடத்தப்படும் 30கற்றை நெறிகளுக்கு இளைஞா,; யுவதிகளிடமிருந்து, விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  

தமிழ்மொழி மூலத்தில் இயங்கும் நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் பொத்துவில், அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, மத்தியமுகாம், திருக்கோவில், ஆலையடிவேம்பு தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்தப் பயிற்சிநெறிகள் நடைபெறவுள்ளன.

இந்தப் பயிற்சிநெறியானது, தேசிய தொழில் தகைமை (என்.வி.கியு) அடிப்படையிலானவை என்பதுடன், 3 மாதங்கள், 06 மாதங்கள் மற்றும் ஒருவருட காலத்தைக் கொண்டவையாக காணப்படும்.  

செயலாண்மை பயிற்சி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், கணினி, வன்பொருள் தொழில்நுட்பவியலாளர், தையல், ஆடைத்தொழிற்சாலை தரக்கட்டுப்பாட்டாளர், அலுமீனியம் பொருத்துநர், எலக்ட்ரிக் மோட்டர் வைன்டர், விடுதி அலங்கரிப்பாளர், பேக்கர், நிர்மாணக் கைவினைஞர், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கரவண்டி திருத்துனர், முச்சக்கரவண்டி திருத்துனர், மின்னியலாளர், நீர்க்குழாய் பொருத்துனர், உருக்கி ஒட்டுனர், மரக் கைவினைஞர், அதிவேக தையல் இயந்திர இயக்குனர் மற்றும் சாரதிப் பயிற்சி போன்ற பல பயிற்சிநெறிகளை இளைஞர், யுவதிகள் தொடர முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் பகுதிநேர கற்கை நெறிகளுக்கும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவங்களையும், மேலதிக விபரங்களையும் நிந்தவூரில் உள்ள மாவட்ட பயிற்சி நிலையத்தில் 071 1211 501 அலைபேசி இலக்கத்துடன் அல்லது பிரதேச தொழிற்பயிற்சி நிலையங்களில் பெற்றுக்கொண்டு எதிர்வரும் டிசெம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, உதவிப்பணிப்பாளர் ரி.விநோதராஜா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X