2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நினைவுத் தூபியின் நிலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அட்டாளைச்சேனை மீலாத் நினைவுத் தூபியின் தற்கால நிலை குறித்து அதிருப்தி தெரிவிக்கும் மக்கள், நினைவுத் தூபியை பாராமரிக்க  வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்துகின்றனர்.

அட்டாளைச்சேனை, சந்தை சதுர்க்கத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீலாத் நினைவுத் தூபியே கவனிப்பாரற்ற நிலையில் சோபை இழந்து வருகின்றமை தொடர்பில் பிரதேச மக்கள் அதிகம் கவலை தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் முயற்சியில், 1997ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழா நினைவாக இத்தூபி நிர்மாணிக்கப்பட்டது.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட மீலாத் நினைவுத் தூபி, இன்று சந்தை வியாபாரிகளின் கேந்திர வியாபார இடமாகவும், கட்டாக்காலி ஆடு, மாடுகளின் உறைவிடமாகவும் காட்சியளிக்கின்றது.

மீலாத் தூபி சுற்றுப்புறம் அதிகம் குப்பை, கூளங்களால் நிறைந்து அருவருப்பாக காணப்படுகின்றது. தூபியின் கீழ்பகுதி நிரந்தரக் குப்பை மேடாகவும் காட்சியளிக்கின்றது.

தினசரி சந்தை வியாபாரிகளால் கொட்டப்படும் கழிவுகள் நீண்ட நேரத்துக்கு அகற்றப்படாது காட்சியளிக்கின்றமை தொடர்பிலும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, வரலாற்று முக்கியத்துவமிக்க மீலாத் நினைவுத் தூபியை, அட்டாளைச்சேனை பிரதேச சபை பராமரிப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென, ​மக்களால் வலியுறுத்தப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .