2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நெற்செய்கையில் அறக்கொட்டி தாக்கம்

Princiya Dixci   / 2021 ஜனவரி 05 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் சில விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கையில் “அறக்கொட்டி” எனும் கபில நிறத் தத்திகள் நோய் தொற்றி வருவதாக, விவசாய திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர், இன்று (05) தெரிவித்தார்.

இந்நோய் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிர்ப்புணர்வூட்டும் வேலைத்திட்டம், விவசாயப் போதனாசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

விவசாயிகள், நெற்பயிரை அடிக்கடி அவதானமாக கவனிக்க வேண்டுமெனவும் நெற் பயிரின் தண்டின் அடிப் பகுதியில் அல்லது நீர் மட்டத்துக்கு அண்மையில் கபில நிற, வெண் முதுகு தண்டுத் தத்திகள் காணப்படுமாயின் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தினார். 

இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த உங்கள் பிராந்திய விவசாய விரிவாக்கல் காரியாலயத்துடன் தொடர்புகொண்டு, உங்கள் பிரதேச விவசாய போதனாசிரியர் ஊடாக தக்கத்தின் அளவை மதிப்பீடு செய்து, சிபாரிசு செய்யபடும் பூச்சி நாசினியை விவசாயப் போதனாசிரியர்களின் பரிந்துரைக்கமைய விசுருமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X