2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யவும்’

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

விவசாயிகளிடம் இருந்து பெரும்போக நெல்லை, உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஸ்ரீலங்கா விவசாய அமைப்பின் தலைவர் ஏ.சி. சிறாஜுடீன் வலியுறுத்தினார்.

குறித்த அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு,  அக்கரைப்பற்று, கல்லோயா வலது கரை வதிவிடத் திட்ட முகாமையாளர் அலுவலகத்தில், இன்று (14) நடைபெற்றது.

இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்துரையாற்றுகையில், அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் எனச் சுட்டிக்காட்டியதுடன், குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக் கூடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டில் 16 மாவட்டங்களில் நெல் உற்பத்தி செய்கை பண்ணப்படுகின்ற போதிலும் அம்பாறை மாவட்டம் 25 சதவீதமான நெல் உற்பத்தியை ஈட்டி, தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் சிலர், நெல்லை குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்கின்றார்கள் எனக் கூறிய அவர், விவசாயிகளின் நன்மை கருதி, ஜனாதிபதி கோடாபய ராஜபக்‌ஷ உடனடியாகக் கவனம் எடுத்து, நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .