2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பண்ணையாளர்களின் கவனத்துக்கு

Princiya Dixci   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கால்நடைகள்  வைத்திருக்கும் பண்ணையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு, கால்நடை சுகாதாரத் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டொக்டர்  எம்.ஏ.நதீர் அறிவுறுத்தியுள்ளார். 

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மாடுகளுக்கு ஒருவித வைரஸ் பரவி வருபதால் சில பிரதேசங்களில் இந்நோயின் தாக்கத்தின் காரணமாக மாடுகள் இறக்கக் கூடிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நோய் அறிகுறி காணப்படும் மாடுகளை தனிமைப்படுத்தி, கால்நடை சுகாதார வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய சிகிச்சையளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மாடுகளுக்கு கட்டி, பாதம் மற்றும் கழுத்துப் பகுதியில் புண் போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அருகில் உள்ள கால்நடை சுகாதார வைத்தியதிகாரிகளுடன் தொடர்புகொள்ளுமாறும் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பவர்கள் மிக்க அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுள்ளார்.

நீர்த் தேக்கங்கள் மற்றும் துப்பரவு செய்யப்படாத இடங்களில் பராமரிக்கப்படும் மாடுகளுக்கே இந்த வைரஸ் அதிகமாகப் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாடுகளுக்கான இந்த நோய்த் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் பால் உற்பத்தி குறைவதோடு, பண்ணையாளர்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X