2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாடசாலை நிதி விவகாரம்: வலுப்பெறும் கண்டனம்

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, நூருள் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலயம், சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து, கல்முனை வலயகல்வி அலுவலகத்தின் முன்னால்  இன்று (12) கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

 மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காக கொண்டு, கல்வியமைச்சின் "அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட10.9 மில்லியன் ரூபாயை இடைநிறுத்தி, வேறுபாடசலைக்கு கொண்டு செல்ல அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகக் கூறி, கடந்த நான்கு நாள்களாக இடம்பெற்று வரும் போராட்டத்தின் ஓர் அங்கமாக  இது நடைபெற்றது.

கிழக்கு மாகாண பிரதம செயலாளரால் எதிர்வரும் திங்கட்கிழமை (16) இப்பாடசாலை விடயம் தொடர்பாகக்  கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடல் தொடர்பான கடிதத்தைப் பெற்றுச்செல்ல அதிபர், பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளருக்கு, கல்முனை வலயக் கல்வியதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதனையறிந்த பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளரை சந்திக்க மேற்கொண்ட முயற்சி கைகூடாத நிலையில், காரியாலய முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X