2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாதணி பரிசுக் கூப்பன்களை பயன்படுத்த கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஷ்ட பிரதேச மற்றும் தனித்துவிடப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கல்வி அமைச்சு, நாடளாவிய ரீதியில் வழங்கியுள்ள பாதணிக் கொடுப்பனவுக்கான பரிசுக் கூப்பன்களை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜீ. பஸ்மில் தெரிவித்தார்.

வருமானம் குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு குறித்த பரிசுக் கூப்பனின் காலாவதி திகதி டிசெம்பர் மாதம் 31ஆம் திகதி ஆகும். ஆகையால், மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இதனை உரிய காலத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.

கல்முனை கல்வி மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் சுமார் 10,000 பாதணிக் கொள்வனவுக்கான பரிசுக் கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்கு சுமார் 7 ஆயிரம் பரிசுக் கூப்பன்களும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச மாணவர்களுக்கு சுமார் 3 ஆயிரம் பரிசுக் கூப்பன்களும் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் டீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .