2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாதயாத்திரைக்கான வன வழிப்பாதை நாளையுடன் மூடப்படும்

Editorial   / 2018 ஜூலை 21 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன்

கதிர்காம உற்சவத்துக்கு வன வழி ஊடாக அடியார்களுக்கான குமண (கூமுனை) வன வழிப்பாதை நாளை 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  மாலை 3 மணிக்கு மூடப்படவுள்ளது.

எனவே, வான வழிப் பாதையினுடாக பாதயாத்திரை செல்லும் பக்த அடியார்கள் இறுதிநேர சன நெரிசலைக் குறைக்கும் முகமாக தமது பயணங்களை உரிய நேரத்துக்கு முன்னதாக மேற்கொள்ளுமாறு, ஆலய வண்ணக்கர் ஜெ.டி.எம்.சூதுநிலமே கேட்டுக்கொண்டார்.

மேலும், வன வழிப்பாதையுனுடாக யாத்திரை செல்வோருக்காக இலவச குடிநீர் விநியோகம் மிகவும் சிரமத்தின் மத்தியில் விநியோகம் செய்யப்படுகின்றது. எனவே, இதனது பெறுமதியைக் கருத்தில்கொண்டு உரிய முறையில் சிக்கனமாக குடிநீரை குடிப்பதற்கு மட்டும்  பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன்,  கதிர்காம பாதயாத்திரை அடியார்கள் ஆலய சூழலில் தங்கி ஓய்வு எடுப்பதற்கும் இவர்களது பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் ,மின்சாரம், மின் விளக்குகள், மருத்துவம் உட்பட போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக   உகந்தை முருகன் ஆலய வண்ணக்கர்  தெரிவித்தார்.

இதேவேளை, இன்றுவரை (21) 29,000க்கும்  அதிகமான யாத்திரிகர்கள், வனத்தினுள் பிரவேசித்திருப்பதாகவும் இவற்றுள் சிலர், கதிர்காம பதியை சென்றடைந்து விட்ட்தாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .