2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாழடைந்த வீடுகளை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, காரைதீவு சிறி சித்தானைக்குட்டிபுரத்திலுள்ள கண்ணகி கிராமத்தில், கட்டிமுடிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்படும் வீடுகளைப் பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஆ. பூபாலரட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஆ.பூபாலரட்ணம் மகஐர் அனுப்பிவைத்துள்ளார்.

“வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு, காரைதீவு வடக்கு எல்லையில், கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்தால் காணிகள் வழங்கப்பட்டு, அமைச்சர் தயா கமகேயின் சிபாரிசில், இவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டது.

“இப்பணத்தை கொண்டு, மேற்படி வீட்டு நிர்மாணப் பணிகளை தொடங்கினார்கள். மேற்கொண்டு வீடுகளைத் தொடர்ந்து கட்டி முடிப்பதற்கு வேறு நிதி இவர்களிடம் இல்லாததால், நிர்மாண பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளன.

“எனவே, பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்குத் தங்கள் அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற புதிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ், வீடுகளை புனரமைத்து கொடுக்கவும்” என அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரின் பிரதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .