2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 நவம்பர் 29 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படுமென, தென்கிழக்குப்  பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சுதந்திர ஊழியர் சங்கத்தின் இரண்டாவது வருடாந்தப் பொதுக் கூட்டம், சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அன்வர் தலைமையில், பல்கலைக்கழக ஒலுவில் வளாக ஊழியர் மேம்பாட்டு மத்திய நிலையக் கேட்போர் கூடத்தில், நேற்று (28) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தொழிற்சங்கங்கள், ஊழியர்களின் உரிமைக்கு மட்டுமல்லாது, தான் சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பதுடன், ஊழியர்களை அவர்களது கடமையின்பால் வழி நடத்திச் செல்ல வேண்டுமென்றார்.

அத்துடன், ஊழியர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றுக்கான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் உபவேந்தர் கேட்டுக்கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களில் பிழையான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளனவென்றும் தொழிற்சங்கங்கள் அதன் வரையரைக்குள் செயற்பட வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை அரசாங்கம் வழங்குவதாகவும் இவர்களின் தேவை பல்கலைக்கழகத்துக்கும், நாட்டுக்கும் தேவை என்பதனாலேயே கூடுதலான சம்பளத்தை இவ்வாறு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஊழியர்களின் நலனில் நிர்வாகம் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்படுமென்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தின், வளர்ச்சிக்காக  கடந்த காலங்களில் இங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஒத்துழைப்பையையும் ஒற்றுமையையும், எதிர்காலத்திலும் முன்னெடுத்து, பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .