2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கை

பைஷல் இஸ்மாயில்   / 2017 ஜூலை 29 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சுகாதார, பாதுகாப்பு, காணி, கல்வி தொடர்பான அதிகாரப் பிரச்சினைகளை கரிசனையுடன் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சுக்கு நிறைந்துள்ள சவால்கள் தொடர்பாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், ஆளுநரைத் தனது அலுவலகத்தில் சந்தித்து, கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார்.

குறித்த சந்திப்பில், கிழக்கு மாகாண அமைச்சுகளைப் பொறுப்பெடுத்ததிலிருந்து, தீர்க்க முடியாமல் சில பிரச்சினைகள் காணப்படுகின்றதாகவும் அவைகளை ஆளுநர் என்ற அடிப்படையில் தீர்பதற்கான வழிகளை மேற்கொள்ளுமாறும், சிறுபான்மையின சார் காணி, பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குச் சவாலாக உள்ள ஆளனிப் பிரச்சினைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும், அரசமைப்பில் அதிகாரம் இல்லாத நிலையில், பல விடயங்களை முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியாமை தொடர்பாகவும் ஆளுநரிடம் அவர் இதன்போது எடுத்துரைத்ததாக அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .