2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

புகைத்தலால் இலங்கையில் தினமும் 70 மரணங்கள்

Editorial   / 2018 ஜூன் 29 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

புகைத்தலினால் இலங்கையில் தினமும் 70 பேர் மரணமடைகின்றனர் என, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு வாரத்தையொட்டி இன்று (29) ஒலுவில் கிராமிய சுகாதார நிலையத்தில், அட்டாளைச்சேனை பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புகையிலை மற்றும் மதுபான பாவனையினால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியயோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

 

இலங்கையில் வருடமொன்றுக்கு சராசரியாக 22 ஆயிரம் பேரும், சர்வதேச ரீதியில் வருடாந்த 60 இலட்சம் பேரும் புகைபிடிப்பதனால் உயிரிழிக்கின்றனர்.

புகைத்தல் காரணமாக இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளோரின் சுகாதார சேவைக்காக அரசாங்கம் வருடம்  ஒன்றுக்கு சுமார்  05 மில்லியன் ரூபாயை செலவு செய்கின்றது.

புகைத்தலினால் இருதய நோய், சுவாச நோய், சிறுநீரக நோய் என்பன ஏற்படுவதுடன், இந்த நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுகாதார அமைச்சு அதிக நிதியை செலவு செய்து வருகின்றது.

ஆரோக்கியமான சமூகமே ஒரு  நாட்டின் மதிப்பிட முடியாத வளமாக உள்ளது. புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு சிறுவர்களும் அடிமையாக மாறிக்கொண்டு வருவது தற்போது எதிர்நோக்கும் பாரிய சவாலாகும்.

தற்போது குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களிலும் புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாவுள்ளது. புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக தங்களின்  வருமானத்திலிருந்து ஒருதொகைப் பணம் செலவிடப்படுவதால்,  போஷனை மட்டம் குறைவடைந்து செல்வதுடன்,  சிறுவர்களின் கல்வி நிலையும் பாதிக்கப்படுகின்றது.

புகைத்தல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு உலகில் நிமிடத்திற்கு 06 பேர் மரணிப்பதற்காக சர்வதேச சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

புகைக்கும் போது வெளிவரும் புகையில் 400க்கும் அதிகமான நச்சு இரசாயனப் பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் 50 வீதமானவை சுவாச புற்று நோயினை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமைகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஊடாக வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றில் சிகரட் விற்பதை தடை செய்வதற்கான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டும் இதனை உதாசீனம் செய்து வருகின்றார்கள்.

வியாபார நிலையங்களில் சிகரட் விற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகவுள்ள மக்களை அதிலிருந்து விடுவித்துக் கொள்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .