2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதிய உயிர்கொல்லி நுளம்பு இனம் கண்டுபிடிப்பு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூலை 10 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் உயிராபத்துகளை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதெனவும், அதனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை எடுத்து வருகின்றதெனவும், சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

இது தொடர்பான இன்று (10) அவர் விவரிக்கையில், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன எனக் குறிப்பிட்டார்.

கண்டெடுக்கப்பட்ட புதிய வகை உயிர்க்கொல்லி நுளம்பின் மாதிரிகள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக, பூச்சி ஆய்வாளர்கள் ஏ.எம்.நயீம், எம்.ஜெஸாயில் ஆகியோரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கையைப் பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றதெனத் தெரிவித்தார்.

இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் பொருட்டு, 10,000 மீன் குஞ்சுகளை, கிணறுகளிலும் நீர் தேங்கி நிற்கும் இடங்களிலும் விட்டு, நுளம்புக் குடம்பிகளை அழிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதெனவும் தெரிவித்தார்.

அத்துடன், நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு துப்புரவு செய்தல், புகை விசுறுதல், கிணறுகள், நீர்த் தாங்கிகளை மூடிப் பாதுகாத்தல் ஆகியனவற்றுடன், மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .