2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய உள்ளூராட்சி மன்றங்கள் விவகாரம்; நாளை உயர்மட்டக் கூட்டம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகரசபை நிர்வாகத்தின் கீழுள்ள சாய்ந்தமருது மற்றும் ஏனைய சில பிரதேசங்களுக்கு, தனியான உள்ளூராட்சிமன்றங்களை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து, உரிய தீர்வை எட்டுவதற்கான உயர்மட்டக் கூட்டம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில், நாளை (26) மாலை 04 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இந்தக் கூட்டம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் அழைப்பின் பேரில், அவரது தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதில் பங்குபற்றுமாறு, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது, கல்முனையின் ஏனைய சில பிரதேசங்களுக்கு, தனியான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிக்குமாறு, சாய்ந்தமருது பள்ளிவாசல் சமூகம் உள்ளிட்ட கல்முனையின் ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்குத் தொடர்ச்சியான அழுத்தங்களைப் பிரயோகித்து, விரைவாக தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X