2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய முறையில் தேர்தல் நடந்தால் ’சிறுபான்மையினருக்கு துரோகம்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுமாயின், அது, சிறுபான்மை மக்களுக்கு அரசாங்கம் செய்யும் மிகப்பெரிய துரோகம் என்று, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கிழக்குவாசலில், நேற்று (02) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொண்டு வந்த ஆட்சிக்கு, முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், நாடாளுமன்றத்தில் கைகளை உயர்த்தியமையாலேயே, இந்தத் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இது, சிறுபான்மை மக்களின் அரசியல் பலத்தையும் குறைக்கச் செய்வதாக அமைகின்றது" என்று தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் வருவதற்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என்று குற்றஞ்சாட்டிய அவர், இவையனைத்துக்கும் முன்னதாக, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .