2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய வகை நோய்த் தொற்று; சோளச்செய்கை பாதிப்பு

நடராஜன் ஹரன்   / 2018 டிசெம்பர் 05 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண விவசாயப் பகுதிகளில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உப உணவுப் பயிராகச் செயகை பண்ணப்பட்டு வரும் சோளம் பயிரில் ஏற்பட்டு வரும் புதியவகை நோய்த் தொற்றின் காரணமாக, சோளச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிக பரப்பளவுகளில் செய்கை பண்ணப்பட்டு வரும் சோளம் உற்பத்தியில் “படைப்புழு” எனச் சொல்லப்படும் புழு இனத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டு வருகின்றது.

இது, இரவு நோரங்களில் அதிகமாக பரவிவருவதுடன்,  தண்டு முதல் தாவரத்தின் அனைத்துப் பகுதிகளையும் தாக்கிவருகின்றது .

 இதனைக் கட்டுப்படுத்த தற்பொழுது கிருமி நாசினிகள் விநியோகிக்கப்படு வருவதாகத் தெரிவித்த விவசாய போதனாசிரியர் பிரிவினர், தற்பொழுது இதனைக் கட்டுப்படுத்த கிழக்கு மாகாண விவசாயப் பகுதியினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

இதேவேளை, பேராதனை விவசாயத் திணைக்களத்தில் இருந்து கள  ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, ஆய்வுக் குழுவொன்று, ஆலையடிவேம்பு விவசாய போதனாசிரியர் பிரிவுகளில்ஆலையடிவேம்பு, கண்ணகிபுரம், அளிக்கம்பை, சாந்திபுரம் போன்ற பகுதிகளில்  விஜயம் மேற்கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றமை  குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .