2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘பெரும்பான்மைக் கட்சிகளுக்கு 3 முகங்கள்’

எஸ்.கார்த்திகேசு   / 2018 ஜூலை 09 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகள், மூன்று முகங்களைக் கொண்டு பாராமுகமாக இருந்து வருகின்றன எனக் குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழ் மக்களுக்கான சுயாட்சியைக் கொண்ட சிறந்த தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

அம்பாறை, திருக்கோவில், காஞ்சிரம்குடாவில், நேற்று (08) இடம்பெற்ற கால்நடை வளர்ப்புப் பண்ணையாளர்கள் பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து உரையாற்றும் போதே, மேற்படி வேண்டுகோளை அவர் விடுத்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “அரசாங்கம், நல்லாட்சி என்று கூறிக் கொண்டு, ஜக்கிய தேசியக் கட்சி ஒரு பக்கம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு பக்கம், பொதுஜன பெரமுன ஒரு பக்கம் என்று பிரிந்து நின்று வேடிக்கை பார்க்காமல், மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து, இந்த நாட்டிலே பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டும்.

“மீண்டும், மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நியாயமான நீதியான விடயங்களில் கரிசனைகளைக் காட்ட வேண்டும்.
“தமிழ் மக்களின் அடிப்படை வசதிகள் கல்வி, பொருளாதாரம், விளையாட்டு ஏனைய சட்டம், ஒழுங்கு என்பன சரியான முறையில் இடம்பெற வேண்டுமானால், தமிழர்களுக்கான முறையான தீர்வு திட்டம் ஒன்று முக்கிய விடயமாக காணப்படுகின்றது.

“எனவே, இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, நல்லாட்சி செயற்பட வேண்டும்” என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .