2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொத்துவிலுக்கு தனி கல்வி வலயம்; ஆளுநர் உறுதி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - பொத்துவில் பிரதேசத்துக்கான தனியான வலயக் கல்வி அலுவலகத்தை வழங்குவதற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வாக்குறுதியளித்துள்ளாரென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதியின் பிரதம அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.எம். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால தேவையாகவுள்ள தனியான கல்வி வலயமொன்றை உருவாக்குவது தொடர்பாக ஆளுநரிடம் விடுத்த கோரிக்கைக்கமைய, இதற்கான வாக்குறுதியை ஆளுநர் வழங்கியுள்ளதாகவும் அவர், நேற்று (05) தெரிவித்தார்.

பொத்துவில் மாணவர்களின் கல்வி சம்பந்தமாக சிறிய பணியைப் பெறுவதாயினும், பொத்துவில் பிரதேச அதிபர்களும் ஆசிரியர்களும் சுமார் 55 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அக்கரைப்பற்று வலயத்துக்கே அடிக்கடி செல்ல வேண்டியுள்ளது.

இதனால், அதிபர்களும் ஆசிரியர்களும் பல அசௌகரீகங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பிரதேசத்தின் கல்வியில் பெரும் வீழ்ச்சி நிலை தோன்றியுள்ளது.

பொத்துவிலில் வலயக் கல்விக் கல்வி பணிமனை அமையும் பட்சத்தில் லாகுகல, பானம உட்பட பொத்துவில் பிரதேசத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகளை நெறிப்படுத்த முடியுமென, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு, பொத்துவில் பிரதேசத்துக்கான உப வலயக் கல்வி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி அலுவலகத்தை, வலயக் கல்வி அலுவலகமாக தரமுயர்த்துவதற்கு இதுவரை எவ்விதமான முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும், ஆளுநரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .