2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘பொத்துவில் மத்திய கல்லூரிக்கு உயர்தர தொழில்நுட்பப் பிரிவு வேண்டும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, பொத்துவில் மத்திய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்பப் பிரிவை ஆரம்பிக்குமாறு, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 1ஏபி பாடசாலைகளுள் ஒன்றாக பொத்துவில் மத்திய கல்லூரி விளங்குகின்றது. பொதுப் பரீட்சை பெறுபெறுகளின் பிரகாரமும் இணைக்கலைத்திட்ட செயற்பாடுகள் மூலமும், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குப் பெருமை தேடிக் கொடுக்கும் பாடசாலையாக, மத்திய கல்லூரி விளங்குகின்றது.

நவீன யுகத்தின் கல்விச் சவால்களை வெற்றிகொள்ளும் முகமாக, கல்வியமைச்சு, உயர்தர விஞ்ஞானப் பிரிவுடன், ஆயிரம் பாடசாலைத் திட்டத்தில் இணைக்கப்பட்ட பாடசாலைகளில் உயர்தர தொழில்நுட்ப அலகை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும், இக்கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படாமல் உள்ளமையால் மாணவர்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என, பெற்றோர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதனால் மாணவர்கள் 50 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள அக்கரைப்பற்று, கல்முனை ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் சென்று, உயர்தர தொழிநுட்பக் கல்வியைப் பயில வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

இதனால், பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக, பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி, பொத்துவில் மத்திய கல்லூரியில் உயர்தர தொழில்நுட்பப் பிரிவை ஆரம்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X