2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொருள் விநியோகத்துக்கு சிறப்பு நடவடிக்கை

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுறவு சேவையில், உணவு வழங்கலும் விநியோகமும் அத்தியாவசிய சேவையாக இருப்பதால், நடவடிக்கைகளை, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், கூட்டுறவு சங்கங்களின் ஊடாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் பதிவாளருமான எம்.சீ.எம். செரீப் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய அரசாங்கத்தின் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் சிங்கப்புலி தலைமையில் இடம்பெறும் இவ்வேலைத்திட்டத்துக்கு, கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் பங்களிப்பு வழங்கி வருகின்றது என்றும் முக்கிய காலப்பகுதியில், பொதுமக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் பொருள் விநியோகசேவை பாராட்டத்தக்கது என்றும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை ஆகிய நான்கு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவிலும் உள்ள 45 பலநோக்கு கூட்டுறவு சங்கங்களினுடாக, அத்தியாவசியப் பொருள்களான அரிசி, சீனி, பருப்பு, டின்மீன் உள்ளிட்ட பொருள்கள், அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையில் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பில் 03 லொறிகளில் 60 மெற்றிக் தொன் பொருள்கள், பலநோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் திருகோணமலைக்கு 02 லொறிகளிலும் கல்முனைக்கு 01 லொறியும் கொழும்பிலிருந்து பொருள்களை கொண்டு வருவதற்காக, கொழும்பில் லொறிகள் தரித்து நிற்கின்றன என்றும் கூறினார்.

அம்பாறை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் பிரிவில், தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தனியாரிடமிருந்து பொருள்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .