2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வட்டமடு விவசாயிகளுடன் தேசிய காங்கிரஸ் உயர்மட்ட குழு சந்திப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2017 டிசெம்பர் 02 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த இருபத்தி ஒன்பது நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வட்டமடு விவசாயிகளுக்கும் சேிய காங்கிரஸ் உயர்மட்ட குழுவினருக்குமிடையிலான விசேட சந்திபொன்று, நேற்றிரவு (01) இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் தேசிய காங்கிரசின் கொள்கைபரப்புச் செயலாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.பஹீஜ், கட்சியின் தேசிய இணைப்பாளர் எஸ்.எம்.சபீஸ், பிரதி தேசிய அமைப்பாளர் யூ.எல்.உவைஸ், ஊடகப்பணிப்பாளர் அஸ்மி ஏ கபூர், உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.கியாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வட்டமடு காணிப்பிரச்சினை தொடர்பில் தமிழ், முஸ்லிம் மக்களை கூட்டிவிட்டு வேறு ஒரு தரப்பினர் அக்காணிகளை சுவீகரிப்பதற்கு காய்நகர்த்துவதாகவும், இது சம்மந்தமாக தேசிய காங்கிரஸ் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் சட்டத்தரணி பஹீஜ் இதன்போது தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவருடனும் பேசி தீர்வு காண்பதற்கு தேசிய காங்கிரஸ் தயாராகவுள்ளதாகவும், தேசிய காங்கிரசின் தலைவரை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்குமாறும் தேசிய காங்கிரசின் உயர்மட்ட குழுவினர் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

வட்டமடு விவசாயிகள் தங்களுக்கு நேர்ந்த துயரங்களை எடுத்துரைத்ததுடன் சகல அரசியல் வாதிகளும் தங்களை ஏமாற்றி நடுவீதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவினால் மாத்திரமே வட்டமடு விவசாயிகளுக்கு தீர்வு வழங்க முடியும் எனவும் வட்டமடு விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .