2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள வேட்பாளா்களுக்கு வாய்ப்பளியுங்கள்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக அன்றி மக்களின் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றக் கூடிய கல்வி அறிவுடையவர்களை நிறுத்துவதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் நேற்று (06) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த காலங்களை விட எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தமிழ் மக்களுக்கு சுதந்திரமானதும்  ஜனநாயக நீரோட்டத்தில் அமைந்ததுமான ஒரு தேர்தலாக அமையப் போகின்றது.

“இத்தேர்தலின் மூலம், தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பு, தற்போதுள்ள அரசியல் செயற்பாட்டு நடவடிக்கை, பிரதேச மற்றும் தேசிய அரசியல் பிரதிநிதிகளின்  செல்வாக்கு என்பனவற்றை  அளவீடு செய்யக்கூடியனவாக இருக்கும்.

“எனவேதான், இத்தேர்தலில் தமிழ் சமூகம் தமக்கான குரலாகவும் சமூகத்தின் மீது அக்கறைகொண்டவர்களாகவும் செயற்படக் கூடிய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அந்தந்த பிரதேச மக்கள் அல்லது கிராம மட்டத்திலான அமைப்புகள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யக் கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

“கொள்கைக்காகவும் தமிழினத்தின் இலக்கை அடைந்து கொள்வதற்காகவும் வாக்களித்து வந்த அம்பாறை மாவட்ட மக்கள் இன்று பணத்துக்காகவும், அற்பசொற்ப இலாபங்களுக்காகவும் சோரம்போகக் கூடியவர்களாக மாற்றப்பட்டவரும் செயலானது ஜனநாயகத்துக்கு விழுந்துள்ள பேரடியாக அமையும்.

“சிலர் தமக்கு விலாசம் தேடுவதற்கும் தாம் செய்து வரும் தொழிலைப் பெரிதாக்குவதற்கும் அரசியலை நாடுகின்றனர். இவ்வாறானவர்கள், அரசியலுக்கு வந்து சமூகத்துக்கும் பிரதேசத்துக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .