2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மண்ணரிப்புப் தொடர்பில் ’நடவடிக்கை எடுக்கப்படவில்லை’

வி.சுகிர்தகுமார்   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் பிரதேச மண்ணரிப்புத் தொடர்பில், பல தடவைகள் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்த போதிலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இச்செயற்பாடு நல்லாட்சிக்கு பங்கம் விளைவிக்கக்கூடியதொன்றாகும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்பாக கடல் நீர் உட்புகுந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு நேற்று (02)  மாலை விரைந்த கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி, நிலைமையை ஆராய்ந்ததுடன், எடுக்கப்பட வேண்டிய தற்காப்பு நிலைகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “செவிடன் காதில் ஊதிய சங்குபோலவே, எமது கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதி இவ்விடயத்தில் மௌனம் காப்பது கவலை அளிப்பதாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

கொழும்பு நகரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள, துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் தாக்கமும் இதற்கு ஒரு காரணம் என்று கூறிய அவர், கொழும்பில் அபிவிருத்தியை முன்னெடுக்கும் அரசாங்கம், நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொணடார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X