2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மத்தியஸ்தம் பயிற்சி நெறி

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 01 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, இறக்காமம் பிரதேச மத்தியஸ்தர் சபைக்கு, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான மத்தியஸ்தம் சம்மந்தமான பயிற்சி நெறி, எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார்.

 

இப்பயிற்சிநெறி,  காலை 08.30 முதல் மாலை 04.15 வரை நடைபெறவுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

கடந்த 2017.02.14ஆம் திகதி மத்தியஸ்த சபை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின் அடிப்படையில், இறக்காமம் பிரதேச மத்தியஸ்தர் சபைக்கு 35 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .