2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மருத்து ரீதியான மசாஜ் சிகிச்சை ஆரம்பித்து வைப்பு

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஜனவரி 29 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் மருத்துவ ரீதியான மசாஜ் சிகிச்சை, வைத்தியப் பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மூட்டுவாதம், இடுப்பு, கை, கால், தலை, வயிறு மற்றும் விறைப்புத் தன்மை உள்ளவர்களுக்கும், விசேடமாக வாத நோய் உள்ள நோய்களுக்கு, இந்த மருத்துவ ரீதியான மசாஜ் சிகிச்சைகளை பயிற்றப்பட்ட ஆண் மற்றும் பெண்களைக் கொண்டு, மிகச் சிறந்த முறையில் வழங்கி வருவதாகவும் வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த மருத்துவ ரீதியான மசாஜ்சிகிச்சை வைத்தியம், மாதத்தில் ஒருமுறை மட்டும் இடம்பெறவுள்ளதாகவும் அதில் கடைசி வாரம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை இந்தச் சிகிச்சை இடம்பெறவுள்ளதாகவும், இந்தத் தினங்களில் 10 ஆண் நோயாளருக்கும், 10 பெண் நோயாளர்களுக்கு மாத்திரமே, இச்சிகிச்சை வழங்கி வைக்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

குறித்த தினத்தன்று மாத்திரமே இந்த நோயாளருக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதற்காக முன் கூட்டிய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சிகிச்சை முறையை, வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் கே.எம்.அஸ்லம் மற்றும் வைத்தியர்களான எம்.பி.எம்.றஜீஸ், ஐ.எல்.அப்துல் ஹை, பர்வீன் முகிடீன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .