2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மருத்துவப் பொறுப்பதிகாரியை இடமாற்றுமாறு கோரிக்கை

Editorial   / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரீ.கே.றஹ்மத்துல்லா

  அம்பாறை, அட்டாளைச்சேனை  ஆயுர்வேத  தள வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரியினை உடனடியாக இடமாற்றித் தருமாறு வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினர் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் ஆகியோரிடம் இன்று(22) நேரடியாக முறையிட்டனர்.

  ஆயுர்வேத தள வைத்தியசாலையின் மருத்துவப் பொறுப்பதிகாரி, இப்பிரதேச மக்களுக்கு முறையான வைத்திய சேவை வழங்குவதில் தடையாகவுள்ளதுடன், இப்பிராந்தியத்தில் வினைத் திறன் மிக்கதொரு   ஆயுர்வேத தள வைத்திய சாலையான இதனை மிகவும் பின்னடைவான ஒரு நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.
 இதேவேளை, வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் சக  வைத்தியர்கள்,  உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் கூட்டுப்பொறுப்பின்றி நடந்து கொள்வதுடன் அதிகாரத் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வருவதாக இவர்கள்  தெரிவித்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 22 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதமொன்றை அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள்,  உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரினாலும்   சுகாதார  அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண ஆணையாளர் ஆகியோருக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.

 குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவப் பொறுப்பதிகாரியின் கீழ் கடமையாற்றுகின்றவர்கள் நாளாந்தம் மன உளைச்சலுக்கு ஆளாகுவதுடன் நல்ல மனநிலையுடன் கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாத சூழல் நிலைக்கு ஆளாகி காணப்படுகின்றோம் எனவும் இதனை சீர் செய்வதற்கு பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் அவை எவையும் பயனளிக்கவில்லைஎன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .