2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மலேரியாவைக் கட்டுப்படுத்த உதவுமாறு வேண்டுகோள்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தின் சில இடங்களில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்புகளைக் கட்டுப்படுத்த, பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுவதாக, அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பறூசா நக்பர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தின் ஒரு பகுதியில் மலேரியா நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரியிடம் கேட்டபோதே, அவர் மேற்படி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியில் அமைந்துள்ள இலங்கைப் போக்குவரத்துச் சாலைக்கு அருகாமையில் ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று இரு பக்கங்களிலும் உள்ள கிணறுகள், நீர்த்தாங்கிகளில் சிலவற்றிலிருந்து, மலேரியா நுளம்பு, இனங்காணப்பட்டுள்ளது.

“புதிய இனமான இந்த மலேரியா நுளம்புகள், இந்தியாவிலிருந்து மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்களில் இனங்காணப்பட்டு, தற்போது அங்கிருந்து அக்கரைப்பற்றுக்கு பரவியுள்ளதாகத் தெரியவருகிறது" என்று குறிப்பிட்டார்.

இந்நுளம்புகள், ஏனைய இடங்களுக்குப் பரவாமல் தடுப்பதற்கு, பாடசாலை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்த அவர், தமது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் இனங்காணப்பட்ட இடங்களில் உள்ள கிணறுகளுக்கு, மலேரியா நுளம்புகளை அழிக்கக் கூடிய மீன்களை வழங்கிவருவதுடன், அறிவுறுத்தல்களையும் வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.

“எனினும், பொதுமக்கள் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்து, உரியவாறு செயற்படுவதன் மூலமே, மலேரியா நுளம்புகள் பரவுவதைத் தடுக்க முடியும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .