2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’மாணவர்களின் சாதனை மண்ணுக்குப் பெருமை’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 ஜூலை 17 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவா்கள் தேசிய ரீதியில் சாதனைகள் படைக்கும்போது, மண்ணுக்கும் மாகாணத்துக்கும் தனித்துவமான கௌரவத்தைப் பெற்றுத் தருபவா்களாக உள்ளனர் என, அக்கரைப்பற்று மாநகர சபையின் யேமர் அதாஉல்லா அகமட் ஸக்கி தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியாக நடைபெற்ற தமிழ் மொழித்தின விவாதப் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாகப் பங்குகொண்டு, முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் மாணவர்களையும் அவர்களின் ஆசிரியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, அக்கரைப்பற்று மாநகர சபையில் இன்று (17) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"அக்கரைப்பற்று பிரதேசம், கல்வியில் மாத்திரமல்லாது, கலை, கலாசாரம், அரசியல், பொருளாதார ரீதியாகவும் பல முன்னேற்றகரமான அடைவுகளைக் கண்டுவருவது மகிழ்சிக்குரிய விடயமாகும். இவ்வாறான சாதனைகள், ஏனைய பாடசாலைகளுக்கும் மாணவா்களுக்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், அக்கரைப்பற்று மண்ணில், அனைத்துத் துறைகளிலும் சாதனை படைக்கக் கூடிய வல்லவர்கள் உள்ளனர் எனவும், அவர்களை இனங்கண்டு முறையாக வழிநடத்தும் போது, மேலும் பல வெற்றிகனைளயும் கௌரவங்களையும் அடைய முடியும் எனவும்குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான எம். ஐ. எம். சஹாப்தீன் மற்றும் பாடசாலை அதிபர், வழிகாட்டிய ஆசிரியர்கள், மாநகர ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .