2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மு.கா.எழுச்சி மாநாட்டுக்கு கல்வீச்சு; 21 பேருக்கு விளக்கமறியல்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சி மாநாட்டின்போது, குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் 21 பேர் கைது செய்யப்பட்டு, 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது எழுச்சி மாநாடு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பங்கேற்புடன், சாய்ந்தமருது - பௌசி மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, சாய்ந்தமருதில் அன்றைய தினம் ஹர்த்தால், கடையடைப்பு இடம்பெற்றதுடன் கறுப்புக்கொடி, செருப்புகள், துப்புத்தடிகள் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த எழுச்சி மாநாட்டின்போது, கூச்சல், கூக்குரல் எழுந்ததுடன், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் உரையுடன் மாநாடு நிறைவடைந்த நிலையில், அங்கு கல்வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களை மேற்கொண்ட பொலிஸார், அவ்விடத்தில் 21 இளைஞர்களை, சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

இவர்கள், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரப்பன முன்னிலையில், இன்று (05) ஆஜர்செய்த போது, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .