2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘முடிவுகள் கிடைக்கும் வரை கடமையாற்றத் தடை இல்லை’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜனவரி 02 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் செய்துள்ள மேற்முறையீடு முடிவுகள் கிடைக்கும் வரை, ஏற்கெனவே கடமையாற்றிய பாடசாலைகளில் கடமையாற்றலாமென, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், இன்று (02) தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் தற்சமயம் நடைபெற்றுவரும் மாகாண மட்ட மேன்முறையீட்டு ஆசிரியர் இடமாற்றசபையின் தீர்மானங்கள் அறிவிக்கப்படும்வரை, குறித்த ஆசிரியர்கள் ஏற்கெனவே கடமையாற்றிய பாடசாலைகளில் கடமையாற்ற முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

மாகாணக் கல்வித் திணைக்களத்தில் தொடர்ச்சியாக 03 தினங்களாக இம்மேன்முறையீட்டு இடமாற்றசபை நடைபெற்றுவருகிறது. எனினும், நேற்று (02) பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் இன்னும் முடிவு கிடைக்காதபடியால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்றுவரும் மேன்முறையீட்டு இடமாற்றசபை இன்னும் சில நாளிலே முடிவுறும். அதன் முடிவுகளை அதாவது மேன்முறையீடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா? என்ற முடிவை மிகவிரைவாக அந்தந்த வலயக்கல்விப் பணிப்பாளர்களிடம் அறிவிக்கப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

மேன்முறையீடு செய்த ஆசிரியர்களுக்கு அந்தந்த அதிபர்கள் அறிவிப்பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .