2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புத் தொடர்பான திட்ட வரைபுகள் இல்லை’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 பெப்ரவரி 05 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எந்த அரசியல் கட்சியாலும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புத் தொடர்பான திட்ட வரைபுகள் இல்லை” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஒலுவிலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று (04) இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“மர்ஹும் அஷ்ரப், ஒலுவில் பிரதேசத்தில் பல சாதனைகளைப் படைத்து, ஆக்கபூர்வமான பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு விட்டுச் சென்றுள்ளார். ஆனால், அவருடைய மறைவுக்குப் பிறகு இப்பிரதேசம் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

“இப்பிரதேசத்தில் அதிகமான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சிமன்றங்களில் இருப்பவர்கள், இப்பிரதேசத்தைக் கண்டும் காணாதவர்களாக இருக்கின்றார்கள்.

“வாக்களித்த மக்களுக்கு, எவ்வாறான அபிவிருத்திகளையும் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இப்பிரதேச அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.

“முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்ட சமூகமாகவே, முஸ்லிம் அரசியல்வாதிகளால் காணப்படுகின்றது.  

“இந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பக்கம் அலையலையாக மக்கள் அணிதிரண்டு வருகின்றார்கள். எமது வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாமையால்தான் மற்றவர்களிடத்தில் கையேந்தும் சமூகமாமாக முஸ்லிம் சமூகம் மாறிவருகின்றது.

“அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் எந்த வித கோரிக்கைகளையும் முன்வைக்காமல் வாய்மூடி மௌனமாக இருக்கின்றது. வடக்கும், கிழக்கும் தனித்தனி மாகாணமாக இருக்க வேண்டுமா, இல்லையா என்பதைக் கூட பேசாமல் எவ்விதக் கருத்தும் செல்லாமல் இருக்கின்றார்கள்.

“தீர்வுத் திட்டத்தில் வடக்கும், கிழக்கும் தனி மாகாணமாக இருக்க வேண்டுமென செல்லப்பட்டுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டும்தான் வடக்கும், கிழக்கும் தனித்தனி மாகாணமாக இருக்க வேண்டுமென எழுதிக் கொடுத்துள்ளது. இன்று அது ஆவணமாக்கப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .