2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

கிராமங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள், மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறவேண்டுமெனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, எமது சமூகத்தினதும் நாட்டினதும் நலனில் அக்கறை கொண்டவர்களாக முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முன்வர வேண்டுமெனத் தெரிவித்தார்.

மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு அமைச்சின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பாலமுனை - புதுநகர் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நேற்று  (18) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இன்று எமது சமூகம் ஓர் இக்கட்டான நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர் எனவும் இந்தத் தேர்தலில் சிறுபான்மையினராக இருக்கின்ற நாங்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் அரசியல் தலைமைகள், அவரவர் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலக்கு ஏற்றவாறு மக்களைத் திசைதிருப்பாமல், எமது சமூகத்தினதும் நாட்டினதும் நலனில் அக்கறை கொண்டவர்களாக ஒற்றுமையாகச் செயற்பட்டு, ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள முன்வர வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .