2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முஸ்லிம் தலைமைகள், வெவ்வேறு முகங்களைக் காட்டுகின்றன

A.K.M. Ramzy   / 2021 ஏப்ரல் 21 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கார்த்திகேசு

  உரிமைக்காக தமிழரக் கட்சி போராடி வருகின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவது தமிழ்,முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியாக பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை  திருக்கோவில் 04 தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளை நிருவாக தெரிவு கூட்டத்தில் செவ்வாயக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்தார்.

 தொடர்ந்து அவர் உரையாற்றகையில்,

இந்த நாட்டில் சிறுபாண்மை மக்கள் தமது இறை வழிபாடுகளைக் கூட சுதந்திரமாக முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன. இந்து ஆலயம் ஒன்றினை அமைக்க வேண்டுமானால் நீண்ட கால குத்தகையில் காணிகள் பெற வேண்டியுள்ளது.

ஆனால், பௌத்த விகாரை ஒன்று அமைப்பது என்றால் சட்டரீதியாக அனுமதிகள் வழங்கப்படுகின்ற நிலைமையில் தான் தற்போது சட்டம் காணப்படுகின்றன. இங்கு ஜனநாயகம் இல்லை என்றே நான் கூறுகின்றேன்.

இவ்வாறான நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.  வடகிழக்கு உட்பட நாட்டில் அனைத்த பகுதிகளிலும் வாழும் தமிழ் பேசும் சமூகம் சுதந்திரமாகவும் நீதியாகவும் வாழ்வதற்கான ஜனநாயகத்தை கேட்டு போராடுகின்ற நிலையில் எங்களது தமிழ்

பேசுகின்ற உறவுகளாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டுகின்ற நிலையில் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமைப்படுத்த முடியாத சூழ்நிலையில் தமிழ் பேசும் சமூகம் பாரிய உரிமை ரீதியான பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .