2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மூடு நிலையில் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம்

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கல்வி கற்றதாக, ஆவணங்கள் மூலம் அறியப்படும் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயம் மூடப்படும் நிலையை அடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

1956ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் தற்போது பயில்வதற்கு எந்தவொரு மாணவரும் இல்லாத நிலையில், அதிபர் ஒருவரும் ஆசிரியர் ஒருவரும் உள்ளனர்.

அம்பாறை நகர்ப் பகுதியில் விசாலமான காணியில் அமைந்துள்ள இப்பாடசாலையின் கட்டடங்கள், இராணுவ மாணவர் படையணி, இளைஞர் படையணி, டி ஈ ஓ அலுவலகம்  என்பனவற்றுக்கு வழங்கப்பட்டுள்ளன. பாடசாலை அதிபர் அலுவலகம் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது.

கல்லோயா ஆற்றுப்பள்ளதாக்கு அபிவிருத்திச் சபையில் முன்னர் பணியாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், இப்பாடசாலையில் கல்விகற்று வந்தனர். 1980களின்பின்னர் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பின்னர் அங்கிருந்த தமிழ் மக்கள் வெளியேறியமையால், இப்பாடசாலையில் கல்விபயின்ற மாணவர்களும் வெளியேறினர்.

அதனால் மாணவர்கள் இன்றி அப்பாடசாலை இயங்கி வந்த நிலையில், அம்பாறை வலயக் கல்விப் பணிப்பாளர் விமலசேன மத்தும ஆராய்ச்சியால் இப்பாடசாலையை மூடுமாறு, கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் டபிள்யூ திஸாநாயக்காவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இபப்பாடசாலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கல்வி பயின்றதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும், அவரது தந்தை வேலுப்பிள்ளை, அக்காலப் பகுதியில் அம்பாறையில் கடமையாற்றியதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X